பாகிஸ்தானிலுள்ள முகாம் ஒன்றில் திடீரென மோர்டார் ரக குண்டுகள் வெடித்து சிதறிய விபத்தில் சிக்கி 4 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்கள்.
பாகிஸ்தானில் வெளிநாடுகளிலிருந்து வருபவர்கள் தங்குவதற்காக வடமேற்கு கைபர் மாநிலத்தில் முகாம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
இந்த முகாமில் திடீரென பழைய மோர்டார் ரக குண்டுகள் வெடித்து சிதறியுள்ளது. இந்த கோர விபத்தில் சிக்கி 4 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்கள்.
இதனையடுத்து படுகாயமடைந்த பலரை அதிகாரிகள் உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார்கள். இந்த விபத்து குறித்து வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர் குழு தீவிர விசாரணை செய்து வருகிறார்கள்.