மதுரையில் வயதான மூதாட்டி அரசு பஸ் மோதி உயிரிழந்ததால் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் .
மதுரை மாவட்டம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் படி பெரியார் பேருந்து நிலையம் நவீன படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் பெரியார் பேருந்து நிலையத்தில் 60 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் நடந்துசென்றுகொண்டிருந்தார். அப்போது திருமங்கலத்திலிருந்து வந்த அரசு பஸ் மூதாட்டி மீது எதிர்பாராத விதமாக மோதியுள்ளது.
இதனால் பஸ்சின் பின் சக்கரத்தில் சிக்கிய மூதாட்டி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இறந்த மூதாட்டியின் கையில் ஒரு மஞ்சப்பை மட்டுமே இருந்துள்ளது.அதில் தண்ணீர் பாட்டில் மட்டும் இருந்ததால் மூதாட்டி யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்ற விவரம் எதுவும் தெரியவில்லை. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள்.