Categories
கொரோனா மாநில செய்திகள்

சற்று நிம்மதி…. 50க்கு கீழ் போன தினசரி பாதிப்பு…. தமிழகத்தில் கொரோனா நிலவரம்….!!

தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு குறித்து நேற்றைய நிலவரபடி மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை குறிப்பிட்டுள்ளதாவது தமிழகத்தில் கொரோனா தொற்று புதிதாக 48 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 89  பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதையடுத்து கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 34,13,930 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் தற்போது  535  பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர் எனவும்  புதிதாக சென்னையில் 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செயப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் இன்று கொரோனாவால்  உயிரிழப்பு ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |