Categories
அரசியல் மாநில செய்திகள்

சற்று நேரத்தில் தமிழக பட்ஜெட் தாக்கல் …!!

பட்ஜெட் தாக்கல் செய்ய சட்டப்பேரவை வந்தடைந்த துணை முதலவர் இன்னும் சில நிமிடங்களில் பட்ஜெட்டை தாக்கல் செய்கின்றார்.

கடந்த ஜனவரி 6ஆம் தேதி தமிழக சட்டசபையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் தொடங்கியது. தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையுடன் தொடங்கிய  இந்த கூட்டுத் தொடர் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தோடு 9ஆம் தேதியோடு நிறைவடைந்தது. இதைத்தொடர்ந்து 2020-2021-ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்தன.

இதைத்தொடர்ந்து கடந்த மாதம் 20ஆம் தேதி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த தமிழக அமைச்சரவை கூட்டத்தில், பட்ஜெட்டில் என்னென்ன புதிய அறிவிப்புகள் இடம்பெற வேண்டும்?, பட்ஜெட்டை எந்தத் தேதியில் தாக்கல் செய்ய வேண்டும்? போன்ற பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதை தொடர்ந்து இன்று காலை 10 மணிக்கு துணை முதல்-அமைச்சரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.

அடுத்த ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதால் தற்போதைய ஆளும் அதிமுக அரசின் கடைசி முழு நிதிநிலை அறிக்கை இது என்பதால் இதில் புதிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு இருக்கின்றன. கல்வித்துறைக்கு கூடுதலாக நிதி ஒதுக்கப்படும் என்ற எதிர்பார்பும் எழுந்துள்ளது. இப்படியான நிலையில் தான் துணை முதலமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம் 10-வது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.

தற்போதைய நிலையில் பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு வீட்டில் இருந்து கிளம்பிய துணை முதல்வர் சேப்பாக்கத்தில் இருக்க கூடிய கோவில் வழிபாடு நடத்திய பின் சட்டப்பேரவை வந்தடைந்தார். அதே போல முதல்வர் , அமைசசர்கள் , சட்டமன்ற உறுப்பினர்கள் என அனைவரும் பேரவைக்கு வந்த நிலையில் இன்னும் சில நிமிடங்களில் பட்ஜெட்டை தாக்கல் செய்கின்றார்.

Categories

Tech |