Categories
மாவட்ட செய்திகள்

சற்று முன்… நாகையை தொடர்ந்து… மயிலாடுதுறை மாவட்டத்திற்கு நாளை லீவு.!!

தமிழகத்தில் சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை கடந்த சில நாட்களாக பெய்து வருகின்றது.. இதனால் பெரும்பாலான மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகின்றது.. தங்கள் மாவட்டங்களில் மழையின் தாக்கத்தை பொருத்து விடுமுறை அளிப்பது பற்றி ஆட்சியர்களே முடிவு செய்து கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது..

இந்நிலையில் கனமழை காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் நாளை பள்ளிகள் மற்றும்  கல்லூரிகளுக்கு விடுமுறை என்று ஆட்சியர் லலிதா அறிவித்துள்ளார்.. ஏற்கனவே புதுக்கோட்டை, திருவாரூர், நாகை மாவட்டத்திற்கு விடுமுறை விடப்பட்ட நிலையில், தற்போது மயிலாடுதுறை மாவட்டத்திற்கும் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது..

Categories

Tech |