சென்னை மாநகராட்சிக்கு ஒவ்வொரு குறிப்பிட்ட அரையாண்டில் முதல் 15 நாட்களுக்குள் சொத்து வரி செலுத்தும் உரிமையாளர்களுக்கு ஊக்கத்தொகையாக சொத்து வரியிலிருந்து ஐந்து சதவீதம் அதிகபட்சமாக 5 ஆயிரம் வரை சலுகை அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி இரண்டாம் அரையாண்டிற்கான சொத்து வரியை இரண்டாம் ஆண்டு தொடங்கிய 15 ஆம் தேதிக்குள் செலுத்திய சொத்து உரிமையாளர்களுக்கு அவர்கள் செலுத்திய சொத்து வரியில் 5% ஊக்கத்தொகையாக ரூ.5.94 கோடி வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நடப்பு இரண்டாம் ஆண்டிற்குரிய சொத்து வரியை 5 சதவீதம் ஊக்கத்தொகை பயன்பெற்று செலுத்த இன்று கடைசி நாள். நாளையில் இருந்து செலுத்தப்படும் சொத்துவரி தொகைக்கு கூடுதலாக 2 சதவீதம் தனிவட்டி உடன் சேர்த்து செலுத்த வேண்டும். அதனால் இன்றுக்குள் www.chennaicorporation.gov.in& namma chennai செயலி மூலம் சொத்து வரியை செலுத்தி 2% அபராதத்தை தவிர்க்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.