பிரபல நடிகர் சல்மான் கான் தனது 55வது பிறந்தநாளை பண்ணை வீட்டில் நண்பர்களுடன் கொண்டாடியுள்ளார் .
ஹிந்தி திரையுலகில் பிரபல நடிகர் சல்மான் கானுக்கு ரசிகர் கூட்டங்கள் ஏராளம் . இவர் நூற்றுக்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்துள்ளார் . இவர் தனது திறமையால் பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார் . இவர் 1965 ஆம் ஆண்டு மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் டிசம்பர் 27-ஆம் தேதி பிறந்தார் . இந்நிலையில் இன்று தனது 55 வது பிறந்தநாளை சல்மான்கான் கொண்டாடி வருகிறார் .
நேற்று இரவே மகாராஷ்டிரா ராய்கட் மாவட்டத்தில் உள்ள அவரது பண்ணை வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு தனது நண்பர்கள் மற்றும் பாலிவுட் துறையினருடன் இணைந்து கேக் வெட்டி மகிழ்ச்சியாக தனது பிறந்தநாளை சல்மான்கான் கொண்டாடியுள்ளார். தற்போது சமூகவலைத்தள பக்கத்தில் சல்மான்கானுக்கு அவரது ரசிகர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.