சல்மான்கானுடன் பூஜா ஹெக்டே பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.
தமிழ் சினிமா உலகில் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான முகமூடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் நடிகை பூஜா ஹெக்டே. இதன் பின்னர் பல திரைப்படங்களில் நடித்து வருகின்றார் பூஜா ஹெக்டே. தற்போது பாலிவுட்டில் சல்மான் கான் நடிக்கும் பைஜான் திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி தற்போது படப்பிடிப்பில் ஈடுபட்டு வருகின்றார்.
இத்திரைப்படத்தில் வெங்கடேஷ் மற்றும் ஜெகபதிபாபு முக்கிய வேடத்தில் நடிக்கின்றார்கள். இந்த நிலையில் இன்று பூஜா ஹெக்டே பிறந்தநாளையொட்டி சல்மான்கான் படப்பிடிப்பில் பிறந்த நாளை கொண்டாடுவதற்கு ஏற்பாடு செய்துள்ளார். பூஜா, சல்மான் கான், வெங்கடேஷ், ஜெகபதிபாபு உள்ளிட்டோருடன் பூஜா பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.