அமெரிக்காவின் நியூயார்க் நகரில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் உலகின் பிரபல எழுத்தாளரான சல்மான் ருஷ்டி கலந்து கொண்டார். அதன் பிறகு மேடையில் திடீரென ஏறிய நபர் சல்மானை கத்தியால் குத்தியுள்ளார். இதில் சல்மானின் கழுத்தில் படுகாயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து சல்மானுக்கு தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு உயிர்பிழைத்தார். மேலும் சல்மான் ருஷ்டி மீது தகவல் நடத்திய. 24 வயதான ஹடி மடர் என்பவரை கைது செய்தனர். அதன் பிறகு அவரை சவுத் ஆகுவான் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் நியூயார்க் போஸ்ட் பத்திரிக்கைக்கு ஒரு பேட்டி அளித்துள்ளார்.
அப்போது கூறிய அவர், “அவர் உயிர் பிழைத்து விட்டார் என்று நான் கேள்விப்பட்ட போது ஆச்சரியமடைந்தேன். ருஷ்டியின் சர்ச்சைக்குரிய புத்தகத்தில் இரண்டு பக்கங்களை தான் வாசித்துள்ளேன். அவரை எனக்கு பிடிக்காது. அவர் ஒரு நல்ல மனிதர் என நான் நினைக்கவில்லை. சவ்தாவுக்கு அவர் வருகிறார் என ட்விட்டரில் தெரிந்து கொண்டு அங்கு செல்ல நான் ஈர்க்கப்பட்டேன். அவர் இஸ்லாம் மீது தாக்குதல் கொடுத்துள்ளார். அவரை நானாகத்தான் தாக்கினேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.