Categories
உலக செய்திகள்

“சல்மான் ருஷ்டி மீதான கொடூர தாக்குதலால் அதிர்ச்சி ஆனேன்”… பிரபல நாட்டு அதிபர் பேச்சு…!!!!!!

உலகின் பிரபல எழுத்தாளரான சல்மான் ருஷ்டி மீது கத்தி குத்து  தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நேற்று முன்தினம் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற சல்மான் விரிவுரை நிகழ்த்திக் கொண்டிருந்தபோது மேடையில் திடீரென ஏறிய நபர் சல்மானை கத்தியால் குத்தி இருக்கின்றார். இதில் சல்மானின் கழுத்தில் படுகாயம் ஏற்பட்டிருக்கிறது. கத்திக்குத்து தாக்குதலில் படுகாயம் அடைந்த சல்மான் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

சல்மான் ருஷ்டி மீது தாக்குதல் நடத்திய 24 வயதான ஹடி மடர் என்னும் நபரை போலீசார் கைது செய்து இருக்கின்றனர். இந்த சூழலில் சல்மான் மீதான கொடூர தாக்குதலால் தானும் தன் மனைவியும் அதிர்ச்சி அடைந்திருப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன்  தெரிவித்து இருக்கின்றார். மேலும் இது தொடர்பாக ஜோ பைடன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, நியூயார்க்கில் சல்மான் ருஷ்டி மீதான கொடூர தாக்குதல் பற்றி அறிந்து நானும் எனது மனைவியும் மிகுந்த அதிர்ச்சியும் கவலையும் அடைந்துள்ளோம். சல்மான் உடல் நலம் பெற அனைத்து அமெரிக்க மக்களும் உலகம் முழுவதும் ஒன்றிணைந்து பிரார்த்திப்போம் என கூறியுள்ளார்.

Categories

Tech |