Categories
உலக செய்திகள்

“சல்மான் ருஷ்டி மீது தாக்குதல்” இவங்கள குற்றம்சாட்ட யாருக்குமே உரிமை கிடையாது…. வெளியுறவு அமைச்சகம்….!!!!

சல்மான்ருஷ்டி தாக்கப்பட்ட விவகாரத்தில் ஈரானுக்கு தொடர்பு இல்லை என அந்நாட்டின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சாத்தானின் கவிதைகள் என்ற புகழ்பெற்ற புத்தகத்தை எழுதிய சல்மான்ருஷ்டி சென்ற 30 வருடங்களுக்கு மேலாக மரணதண்டனை அச்சுறுத்தல்களை எதிர்கொண்டு வந்தார். இந்நிலையில் சென்ற சில நாட்களுக்கு முன் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவரை ஹதி மட்டார் என்ற இளைஞர் கத்தியால் குத்தினார். இதனால் ருஷ்டியின் கை நரம்பு, கண், கல்லீரல் உள்ளிட்ட உறுப்புகளில் காயம் ஏற்பட்டது. இப்போது அவர் மருத்துவனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். இதனிடையில் சல்மான்ருஷ்டி மீதான தாக்குதலுக்கு ஈரான் மீது சில நாடுகள் குற்றம்சாட்டியது.

இந்த நிலையில் சல்மான்ருஷ்டி தாக்குதலுக்கும், ஈரானுக்கும் தொடர்பு இல்லை என்று அந்நாட்டின் வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் நசார் கானானி தெரிவித்துள்ளார். இது தொடராக பேசிய அவர் “சல்மான்ருஷ்டி அமெரிக்காவில் தாக்கப்பட்டதற்கு அவரும் அவரது ஆதரவாளர்களுமே காரணம். இவ்விவகாரத்தில் ஈரானை குற்றம் சாட்டுவதற்கு யாருக்கும் உரிமை கிடையாது. இது பற்றி அமெரிக்க ஊடகங்களில் வெளியாகிய செய்திகளை விட கூடுதல் தகவல்கள் ஈரானிடம் இல்லை. தாக்கியவரின் செயலைக் கண்டிப்பதாக சொல்லி மேற்கத்திய நாடுகள் இஸ்லாமிய நம்பிக்கைகளை இழிவு படுத்துவது முரண்பாடான செயல்” என்று அவர் தெரிவித்தார்.

Categories

Tech |