Categories
தேசிய செய்திகள்

சல்யூட் அடிக்கும் போலீஸ்… இனிமே அது வேண்டாம்… காரணம் இதுதான்… ஐபிஎஸ் அதிகாரி அதிரடி உத்தரவு…!!!

போக்குவரத்து போலீசார் பணியில் இருக்கும்போது உயர் அதிகாரிகள் சாலையில் சென்றால் அவர்களுக்கு சல்யூட் அடிக்க தேவையில்லை என ஐபிஎஸ் அதிகாரி கூறியுள்ளார்.

கர்நாடக மாநிலத்தின் போக்குவரத்துத்துறை டிஐஜி ஆக பணி மாற்றம் செய்யப்பட்டுள்ள உள்துறைச் செயலாளர் ரூபா கூறியிருப்பது, “போக்குவரத்து போலீசார் மக்களை காப்பாற்றுவது மட்டுமல்லாமல் போக்குவரத்து நெரிசலை சீர்செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். போக்குவரத்தில் போலீசார் இல்லை என்றால் மக்கள் அனைவரும் சாலைகளில் பாதுகாப்பாக செல்ல முடியாது. அவர்கள் தங்களின் உயிரையும், உடல் நலத்தையும் பெரிதாக கருதாமல் பணியாற்றி வருகிறார்கள். அவர்கள் தன் கடமையை கதி என்று இருக்கிறார்கள்.

அதில் போக்குவரத்து காவலர்கள் சிலர், உயரதிகாரிகள் சாலையில் வரும்போது பதட்டம் அடைந்து, அவர்களுக்கு சல்யூட் அடிக்க வேண்டும் என்ற கவனத்தில் போக்குவரத்து நெரிசலை சீர் செய்ய தவறி விடுகிறார்கள். அதனால் போக்குவரத்து காவலர்கள் சாலையில் பணியாற்றும்போது இனி உயரதிகாரிகள் வாகனத்தில் சென்றால் அவர்களுக்கு சல்யூட் அடிக்க வேண்டிய அவசியமில்லை.

இந்த நடைமுறையை அமல்படுத்தினால் காவலர்கள் தங்கள் உயிரை பாதுகாத்துக் கொள்ள முடியும். வாகன ஓட்டிகள் பாதுகாப்பாக இருக்க முடியும். சல்யூட் அடிப்பதற்கு பதிலாக அவர்கள் தங்கள் கடமையை சரியாக செய்தால் மட்டும் போதும். இந்தக் கருத்தை போக்குவரத்து உயர் போலீஸ் அதிகாரியின் கவனத்திற்கு எடுத்துச் செல்லுங்கள்” என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |