Categories
மாநில செய்திகள்

சல்யூட்….. “கடல் அலையில் சிக்கி உயிருக்கு போராடிய சிறுவன்”….. விரைந்து சென்று உயிரை காப்பாற்றிய டிஜிபி சைலேந்திரபாபு….!!

கடல் அலையில் சிக்கி உயிருக்கு போராடிய சிறுவனை தக்க சமயத்தில் முதலுதவி செய்து உயிரைக் காப்பாற்றினார் டிஜிபி சைலேந்திரபாபு.

தமிழக டிஜிபி ஆக பொறுப்பு வகித்து வருபவர் சைலேந்திரபாபு. இவர் தினமும் நடைப்பயிற்சி செய்வது மற்றும் தனது குழுவினருடன் சைக்கிளில் பல கிலோமீட்டர் பயணிப்பது என எப்போதுமே ஆக்டிவாக இருப்பார்.. உடற்பயிற்சியில் ஆர்வம் காட்டும் இவர் அவ்வப்போது அது தொடர்பாக விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறார்.. இந்நிலையில்  நேற்று மாலை சைலேந்திர பாபு மெரினா கடற்கரையில் நடைப்பயிற்சி மேற்கொண்டுள்ளார்.. அப்போது ஒரு சிறுவன் கடல் அலையில் சிக்கிய நிலையில், அவரை அங்கிருந்தவர்கள் மீட்டனர்..

இதனைக் கண்ட டிஜிபி சைலேந்திர பாபு உடனடியாக அந்த இடத்திற்கு விரைந்து சென்று பாதிக்கப்பட்ட சிறுவனின் நெஞ்சில் கையால் அமுக்கி முதலுதவி செய்தார்.. அதன் பின் அந்த சிறுவனை தூக்கிய அவர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார்.. டிஜிபி சைலேந்திரபாபு அந்த சிறுவனுக்கு முதலுதவி செய்யும் வீடியோ காட்சியை தமிழ்நாடு போலீஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இதனைப்பார்த்த நெட்டிசன்கள் டிஜிபி சைலேந்திர பாபுவை பாராட்டி வருகின்றனர்.. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Categories

Tech |