Categories
இயற்கை மருத்துவம் உணவு வகைகள்

சளித்தொல்லைக்கு உகந்த தூதுவளை ரசம்! 

தூதுவளை இந்தியாவின் அனைத்து இடங்களிலும் பயிராகும் கற்பக மூலிகைகளில் ஒன்று. இதற்கு தூதுவளை, சிங்கவல்லி, அளர்க்கம் என்று பல பெயர்கள் உண்டு. சிறு முட்கள் நிறைந்து காணப்படும். இதன் இலை, பூ, காய், வேர் அனைத்தும் மருத்துவப் பயன்கள் கொண்டது.

தேவையான பொருட்கள் : 

தூதுவளை இலைகள் – 2 கப் ,
 புளிக்கரைசல் – ஒரு கப்,
மிளகு, சீரகம் – தலா 2 ஸ்பூன்,
மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் – தலா கால் டீஸ்பூன்,
வேகவைத்த பாசிப்பருப்பு தண்ணீர் – ஒரு கப்,
தட்டிய பூண்டு – 5 பல்,
கடுகு, உளுத்தம்பருப்பு – தலா அரை டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் – 2,
கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை – சிறிதளவு,
தக்காளி – 1,
நல்லெண்ணெய் – 2 டீஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு.

செய்முறை : 

முதலில் புளிக்கரைசலை தயார் செய்து கொள்ளவும். தக்காளி, சீரகம், பூண்டு, மிளகு இவற்றை ஒன்றாக அரைத்து கொள்ளவும். வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய், தூதுவளை இலைகள் சேர்த்து வதக்கவேண்டும். 

இதனுடன் உப்பு, மஞ்சள் தூள், அரைத்து வைத்துள்ளவற்றை சேர்த்துக் கலக்கவும். பின்னர் இதனுடன் புளிக்கரைசல் ஊற்றி ஒரு கொதிவிடவும். பிறகு பருப்புத் தண்ணீர் சேர்த்து நுரைத்து வரும்போது இறக்கவும். மேலே கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவேண்டும்.

Categories

Tech |