தூதுவளை சூப் செய்ய தேவையான பொருட்கள்:
தூதுவளைக் கீரை -1 கப்
வெங்காயம் – 1
பூண்டு – 5 பல்
மிளகுத்தூள் – அரை டீஸ்பூன்
சீரகத்தூள் – அரை டீஸ்பூன்
தேங்காய் பால் -அரை கப்
எண்ணெய் – 3 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
முதலில் தூதுவளை கீரையை நன்கு ஆய்ந்து சுத்தம் செய்து கொள்ளவும். பூண்டை தோலுரித்து நறுக்கி வைக்கவும்.
அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும் வெங்காயம், பூண்டு, தூதுவளை கீரை, 3 கப் தண்ணீர், உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
தூதுவளைக் கீரை வெந்ததும், இறக்கும் போது அரை டீஸ்பூண் மிளகுத்தூள்,அரை டிஸ்பூன் சீரகத்தூள் சேர்த்துப் பரிமாரினால் வாசனையாகவும், சுவையாகவும் இருக்கும்.