Categories
லைப் ஸ்டைல்

சளி, இருமலை போக்கும் குப்பைமேனி… பல நோய்களுக்கும் அருமருந்து…!!!

உடலில் உள்ள பல நோய்களுக்கு அருமருந்தாக அமையும் குப்பைமேனியின் நன்மைகள் பற்றி பார்க்கலாம் வாருங்கள்.

நம் அன்றாட வாழ்வில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. அவ்வாறு நாம் தினமும் எடுத்துக்கொள்ளும் உணவுகளை உடலுக்கு ஆரோக்கியம் தரும் முறையில் அதிக அளவு சத்து நிறைந்த உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும். சிலர் அளவுகடந்த உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்வதால் பல நோய்கள் ஏற்படுகின்றன. அதிலும் குறிப்பாக குளிர்பானங்களை அதிகம் சாப்பிடுவதால் சளி இருமல் போன்ற நோய்கள் உண்டாகின்றன.

அவ்வாறு ஏற்படும் சளி இருமலை போக்க குப்பைமேனி ஒரு அருமருந்தாக அமைகிறது. குப்பைமேனி சாற்றை குடித்தால் சளி இருமல் குணமாகும். நெற்றியில் தடவினால் தலைவலி நீங்கும். குப்பைமேனி இலையை அரைத்து காதோரம் போட்டால் காது வலி சரியாகும். படுக்கை பெண்களுக்கு குப்பைமேனி இலையை பொடி செய்து புண்களின் மீது வைத்துக் கட்டினால் புண் குணமாகும். குப்பைமேனி சாறு தொண்டை கட்டு பிரச்சினையை நீக்க வல்லது.

Categories

Tech |