தமிழக மற்றும் புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக குழந்தைகளுகிடையே வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. அதிலும் பள்ளி செல்லும் குழந்தைகளிடையே இந்த வைரஸ் காய்ச்சல் அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனால் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இவ்வாறு வைரஸ் காய்ச்சல் தீவிரமாக பரவி வருவதால், இன்று 1000 இடங்களில் ‘சிறப்பு காய்ச்சல்’ தடுப்பு முகாம்கள் நடைபெறும் என்று அமைச்சர் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். அதன்படி, சளி, காய்ச்சல், இருமல், போன்ற அறிகுறி உடையவர்கள், இந்த முகாமிற்கு வந்து சிகிச்சை பெறலாம். ஒரே பகுதியில் 3 பேருக்கு மேல் காய்ச்சல் இருந்தால், அங்கு நாளை சிறப்பு முகாம் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முகாம்களுக்கு குழந்தைகளையும் அழைத்துச் செல்லலாம்.