Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

சளி-இருமல் …பிரச்சனையிலிருந்து விடுபட.. எளிமையான டிப்ஸ்..!!

சளி, இருமல் குணமாக இரவு தூங்குவதற்கு 30 நிமிடம் முன் இதை பருகி அவற்றிலிருந்து விடுபடுங்கள். குணமாவதற்கு ஒரு எளிமையான வீட்டு வைத்தியம்..!

இந்த வைத்தியம் இரவு நேரங்களில் செய்யக்கூடியது. அதுவும் தூங்கச் செல்வதற்கு முன்னாடி செய்வது. நிறைய பேருக்கு நெஞ்சு சளி, தொண்டையில் சளி கட்டி இருக்கும்.  சளி, இருமல் பிரச்சனைகள் நிறைய பேருக்கு ரொம்பவே கஷ்டத்தை கொடுக்கும். குறிப்பாக இரவு நேரத்தில் எல்லோருக்குமே அதிகப்படியான சிரமத்தைக் கொடுக்கும்.

இந்த பிரச்சினைக்கு என்ன தேவை.? எப்படி செய்யலாம்.? முதலில் ஒரு டம்ளர் பாலை நன்றாக  காய்ச்சிக் கொள்ள வேண்டும். இதோடு கால் ஸ்பூன் மஞ்சள் பொடி, அதன் பிறகு கால் ஸ்பூன் சீரகப் பொடி, கடைசியாக கால் ஸ்பூன் மிளகுத்தூள், இப்பொழுது இவை அனைத்தையும் கலந்து  கொள்ளவும்.

மஞ்சள்தூள் உங்களுடைய இருமல் பிரச்சனைகள்,சளி பிரச்சினைகளும் நீக்கக்கூடிய தன்மைகள் இருக்கிறது. சீரகத்தூள், மிளகுத்தூள் உங்களுடைய நெஞ்சு சளி கட்டி இருப்பதை  பொழுது  கரைத்துவிடும்.

இதனால் ரொம்பவே சிரமப்படுவார்கள் இரவில், இருமும் பொழுது அந்த சளி கட்டியாக வரும். இந்த மாதிரி பிரச்சனைகள் நிறைய பேருக்கு அமைதியை கெடுக்கும். அதனால் இந்த வீட்டு வைத்தியத்தை இரவில் செய்யவேண்டும். தூங்க செல்வதற்கு 30 நிமிடத்திற்கு முன்னாடி  வாருங்கள். காலையில் சளி பிரச்சனையும், இருமல் பிரச்சனையும் இருக்காது பூரணமாக குணமாகி விடும்.

Categories

Tech |