Categories
மாநில செய்திகள்

சளி, காய்ச்சலா….. மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டாம்….. வெளியான முக்கிய உத்தரவு….!!!!

தமிழகத்தில் தொற்று பரவல் அதிகரித்தாலும் தற்போதைக்கு புதிய கட்டுப்பாடுகள் இல்லை என்று அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: “தமிழகத்தில் தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. பெருநகர சென்னை மாநகராட்சி பொது சுகாதாரத் துறையின் சார்பில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மிகச்சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மேலும் பொதுமக்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதற்கு முன்பு அவர்களுக்கு சளி, இருமல், காய்ச்சல் போன்ற சிறிய அளவிலான அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்குச் சென்று ஆலோசனை பெறுவது அவசியம்.

அவர்களை பரிசோதித்து விட்டு மீண்டும் பாதிப்பு இல்லை என்றால் பள்ளிக்கு அனுப்பலாம். அறிகுறி இருந்தால் அவர்களை பள்ளிகளுக்கு அனுப்ப வேண்டாம். ஒரு குழந்தைக்கு பாதித்தால் அது நூற்றுக்கணக்கான குழந்தைகளை பாதிக்கும். எனவே சிறிய அளவில் சளி, இருமல் போன்ற பாதிப்பு என அலட்சியமாக இல்லாமல் பரிசோதனை மேற்கொண்டு மற்ற குழந்தைகளுக்கு அந்த பாதிப்பு ஏற்படாமல் தடுக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

Categories

Tech |