Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

சளி, ஜலதோஷம், காய்ச்சல்….இயற்கையான முறையில் ஆரம்பத்திலே அழிப்போம்..!!

சளி, ஜலதோஷம், காய்ச்சல் என இவை அனைத்தும் கொரோனா தொற்றிற்கு அறிகுறிகளாக இருக்கிறது. அதை நாம் இயற்கையான முறையில் ஆரம்பத்திலே அழிப்போம்..!

ஜலதோஷம் பிடித்து விட்டால் பல நாட்கள் வரை நம்மை பாடாய் படுத்திவிடும். நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு ஒரு மாதம் கூட ஆகிவிடும். இது தொண்டை வலியில் ஆரம்பித்து காய்ச்சல் வரை கொண்டுபோய்விடும். இப்படி ஜலதோஷம், காய்ச்சல், இருமல் என எதற்கெடுத்தாலும் மருந்துகளை அதிகமாக வாங்கி சாப்பிடுவதற்கு பதிலாக இயற்கை மருந்துகளை பயன்படுத்தி நிவாரணம் பெறலாம்.

இதனால் பணமும் மிச்சம் ஆவதோடு, பக்க விளைவுகள் இல்லாமலும்  நோய்  குணமாகிவிடும். சளியை ஆரம்ப நிலையிலேயே போக்கி தீவிரமான நிலைக்கு போகாமல் இருக்க மிக எளிமையான இரண்டு தீர்வு. இதை செய்ய ஆரம்பித்த இரண்டே நாட்களில் சளி குணமாகி உங்கள் வேலையை பார்க்க ஆரம்பித்துவிடுவார்கள்.

1. நாட்டு மருந்து கடைகளில் திரிகடுகம் என்ற ஒரு முக்கூட்டு மருந்து கிடைக்கும். சுக்கு, மிளகு, திப்பிலி என்னும் அருமருந்து சரியான விகிதத்தில் கலந்த கலவை. இது மிகச் சிறந்த சித்த  சித்தமருந்து ஆகும். அது மட்டுமல்ல உடலின் அனைத்து பிரச்சனைகளையும் சரிசெய்யும் அருமருந்தாக பயன்படுகிறது. இதன் பலன்கள் ஏராளம், இதனை கொண்டு தேநீர் தயாரித்து சளியை எவ்வாறு போக்குவது.?

ஒரு பாத்திரத்தில் 3 டம்ளர் தண்ணீர் ஊற்றி, அதில் திரிகடுக சூரணத்தை 2 ஸ்பூன் அளவிற்கு சேர்த்து, நன்கு கொதித்து 3 டம்ளர் தண்ணீர் ஒரு டம்ளர் என்ற அளவிற்கு வரும் வரை சுண்ட காய்ச்ச வேண்டும். அதன் பின்னர் இந்த நீரை ஒரு பாத்திரத்தில் வடிகட்டி சூடு தணிந்த பிறகு சிறுக சிறுக பருகி வர வேண்டும்.

சித்த வைத்தியத்தில் சுண்டக்காய்ச்சி பருகுவது என்பது மிக சக்தி வாய்ந்த ஒரு நோய் தீர்ப்பு மருந்தாகும். இதன் அடிப்படையில் நாம் பருகி வரும் இந்த திரிகடுக தேநீர், ஜலதோஷத்தை முற்றிலும் போக்கும், ஒரு நாளில் 2 அல்லது 3 முறை பருகினால் ஜலதோஷம் நீங்கி உடல் நிலை சரியாகி விடும்.

2. அதேபோன்று சிலருக்கு மண்டையில் நீர் கோர்த்துக் கொண்டு தலை பாரமாக குனியவும் முடியாது, நிமிரவும் முடியாது அந்த அளவிற்கு பாடாய்படுத்தும். இதற்கு அகத்தியர் தன் நூலில் அக்கினிசேகரத்தையும், வெள்ளை-யையும் சேர்த்தால் இரத்தம் வரும், இதை பூசினால் உடனடியாக குணம் கிடைக்கும் என்று தெரியப்படுத்தி இருந்தார்.  இதில் அக்கினிசேகரம் என்றால் மஞ்சளையும், வெள்ளை என்றால் வெற்றிலைக்கு வைக்கும் சுண்ணாம்பையும் குறிக்கும்.

இரண்டையும் சேர்த்து சிவப்பு வண்ணத்தில் ஒரு கலவை கிடைக்கும், இதுதான் மருந்து என்கிறார்கள். அதாவது இரண்டு ஸ்பூன் அளவிற்கு மஞ்சள் பொடி, கால் ஸ்பூன் அளவு சுண்ணாம்பு இதில் சிறிது தண்ணீர் விட்டு பூசுவதற்கு தகுந்தார் போன்று, நெற்றியிலும், மூக்கின் மேலும் இதை பூச வேண்டும். இப்படி செய்யும் பொழுது மண்டையில் இருக்கும் அத்தனை நீரையும் சுண்ணாம்பு எடுத்துவிடும்.

இரவில் தூங்கச் செல்லும் முன்பு பூசிவிட்டு செல்லுங்கள். இதை தடவிய பிறகு நன்றாக தூக்கம் வரும். காலையில் எழுந்தால் ஒரு புத்துணர்வு கிடைப்பதாக உணர்வீர்கள். உங்களுக்கு ஜலதோஷம் பிடித்து விட்டால் உடனே இதன் இரண்டையும் செய்து பாருங்கள் இருமல் காய்ச்சல் வரை செல்லாமல் பார்த்துக் கொள்ளலாம் பக்க விளைவுகளும் இருக்காது.

Categories

Tech |