ஏலக்காய் இனிப்பு பலகாரங்கள், பிரியாணி போன்ற உணவில் வாசனை மற்றும் ருசிக்காக மட்டும் பயன்படுத்தும் பொருளாக மட்டும் தான் நமக்கு தெரியும். ஆனால் ஏலக்காய் சளி, இருமலில் இருந்து பல உடல் நலக் குறைபாடுகளை தீர்க்கும் அருமருந்தாக உள்ளது என்று சிலருக்கு மட்டுமே தெரிந்த ஒன்றாக இருக்கிறது. இந்த ஏலக்காய் ஹைடோஸ் போல ஒரு வீரியம் மிக்க மருத்துவ குணம் உடையது. எனவே இதை சிறிதளவு தான் சேர்க்க வேண்டும். அதிகமாக சேர்ப்பதால் தீமை விளைவிக்கும்.
வாய் துர்நாற்றம்:
வாய் துர்நாற்றம் ஏற்படுவதற்கு செரிமானம் சம்மந்தமாக ஏற்படும் பிரச்சினைதான் காரணம். எனவே வாய் துர்நாற்றத்தைப் போக்க ஏலக்காயை மென்று சாப்பிட்டால் வாய் துர்நாற்றம் போய்விடும்.
பசி:
பசிக்கவில்லை அல்லது சாப்பிட பிடிக்கவில்லை என்று கஉங்களுக்கு இருந்தால் தினமும் ஒரு ஏலக்காயை வாயில் போட்டு மென்றால் பசி எடுக்கும். ஜீரண உறுப்புகள் சீராக இயங்கும்.
கருவளம் குறைபாடு:
பாலை சுடவைத்து இத்துடன் ஒரு டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து தினமும் குடித்து வந்தால் இருபாலருக்கும் கருவள குறைபாடுகள் நீங்கும். இத்துடன் ஒரு சிட்டிகை ஏலக்காய்த் தூள் பயன் படுத்தினால் போதும்.
நெஞ்சு சளி:
நெஞ்சில் சளி உள்ளவர்கள், இருமல் மாறும் வயிற்று வலி பிரச்சினை உள்ளவர்களுக்கு ஏலக்காய் அற்புதமான மருந்தாக செயல்பட்டு நல்ல பலனைக் கொடுக்கிறது.