வெள்ளை எருக்கன் செடியில் என்னென்ன மருத்துவ குணங்கள் இருக்கிறது என்பது குறித்து இப்போது பார்க்கலாம்.
மூலிகை தாவரங்களிலேயே தண்ணீர் இல்லாமல் 12 ஆண்டுகள் வரை உயிர் வாழக் கூடியது எருக்கஞ்செடி. இதில் வெள்ளருக்கு சிறப்பு வாய்ந்தது. எருக்கன் செடியின் பூ, பட்டை, வேர் என அனைத்துமே மருத்துவ குணங்கள் கொண்டவை. இதன் மருத்துவ குணங்கள் என்னவென்று இப்போது பார்க்கலாம்.
இரைப்பு பிரச்சினை:
எருக்கன் பூவை எடுத்து அதில் உள்ள நடுவில் இருக்கும் நரம்புகளை நீக்கிவிட்டு வெள்ளை இதழ்களை மட்டும் தனியாக எடுத்து சுத்தம் செய்து கொள்ள வேண்டும். அதனுடன் சிறிது மிளகு கிராம்பு சேர்த்து மைய அரைக்கவும். நீர் சேர்க்காமல் அரைத்துக் கொள்ளவேண்டும். இந்த விழுதை சிறுசிறு உருண்டைகளாக உழுத்தம் பருப்பு அளவில் தட்டி அதன் மேல் மெல்லிய துணி போட்டு காய வைத்து விட வேண்டும். இவ்வாறு நன்கு காய்ந்ததும் எடுத்து கண்ணாடி பாட்டிலில் அடைத்து வைத்துக் கொள்ளவேண்டும். ஆஸ்துமா நோயாளிகள் இரைப்பு பிரச்சினையை எதிர்கொள்ளும்போது ஒவ்வொரு உருண்டையாக வாயில் போட்டு தண்ணீர் குடித்து விடுங்கள் இந்த பிரச்சினையை உடனே சரிசெய்யும்.
மார்புச்சளி:
மார்புச்சளி அதிகமாக இருக்கும்போது எருக்கன் இலையை எரிய வைத்தால் வரும் புகையை வாய் வழியாக சுவாசிக்கும் போது மார்புச்சளி வெளியேறும். நடுத்தர வயதுக் குழந்தைகளுக்கும் சரி, வயதானவர்களுக்கும் மார்பு சளி இருக்கும் போது அறையில் மண்சட்டியில் எருக்கன் இலையை போட்டு எரித்து புகையை அறை முழுக்க, குழந்தைகள் வாசிக்கும் அளவுக்கு போட்டால் போதும். இல்லையெனில் மூச்சுத் திணறல் உண்டாகி விடும்.
ஆறாத புண்கள்:
ஆறாத புண்கள் இருக்கும் போது அதில் அதிக கிருமிகள் தேங்கி, அதோடு சீல் வைக்கும் அளவிற்கு பிரச்சினை வரும். அப்படி புண்கள் இருந்தால் எருக்கன் பூ பொடியை எடுத்து வெதுவெதுப்பான நீரில் கலந்து அந்த இடத்தில் போட்டு வந்தால் புண் விரைவாக ஆறிவிடும். புண்ணில் இருக்கும் விஷ கிருமிகள் வெளியேறி விடும்.
குடற்புழுக்களை வெளியேற்ற:
குடலில் புழுக்கள் அதிகமாக இருந்தால் ஆசனவாயில் அரிப்பு ஏற்பட்டால் வயிற்றுப் பூச்சிகள் இருப்பதற்கான அறிகுறி. இந்த பூச்சிகளை வெளியேற்ற எருக்கன் இலைச்சாறுடன் தேன் கலந்து கொடுத்தால் புழுக்கள் வெளியேறும்.
விஷக்கடி:
விஷப்பூச்சிகள் கடித்தால் எருக்கன் இலையை அரைத்து அப்படியே பச்சையாக சாப்பிட கொடுக்கவேண்டும். விஷத்தை இறக்கி விடும்.
பல்சொத்தை:
எருக்கம் பூவை நிழலில் உலர்த்தி பொடியாக்கி அதோடு உப்பு கலந்து பல் தேய்த்து வந்தால் பல் சொத்தை வராமல் தடுக்கலாம். பல்கூச்சம், சொத்தை போன்ற பிரச்சனைகளுக்கு மருந்தாகும்.
சீல் வடிதல்:
காதில் சீழ் வடியும் குழந்தைகளுக்கு எருக்கன் இல்லை மற்றும் பெருங்காயம் சேர்த்து பூண்டு தட்டி அரை மணி நேரம் வைக்கவும். பிறகு மேலாக படிந்த நீரை எடுத்து இரண்டு சொட்டு காதில் விட்டால் காதில் சீழ் வடிதல் தடுக்கமுடியும்.