Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

சவாரிக்கு சென்ற ஆட்டோ ஓட்டுநர்…. திடீரென நடந்த விபரீதம்…. போலீஸ் வலைவீச்சு…!!

ஆட்டோ ஓட்டுனரிடம் வழிப்பறி செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள குழித்துறைக்கு அருகே உள்ள செல்லாம்கோணம் பகுதியில் தனிஸ்லாஸ் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆட்டோ ஓட்டுனராக இருக்கிறார். இவர் வழக்கம் போல் சவாரிக்கு சென்றுள்ளார். இவர் நட்டாலம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது 2 பேர் ஆட்டோவை  மறித்து தனுஸ்லாசை சரமாரியாக தாக்கியுள்ளனர்.

அதன்பிறகு அவரிடம் இருந்த செல்போன் மற்றும் 7,000 ரூபாய் பணம் ஆகியவற்றை திருடி விட்டு அங்கிருந்து சென்றுள்ளனர். இதுகுறித்து தனிஸ்லாஸ் மார்த்தாண்டம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |