நந்திகிராமம் தொகுதியில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளார்.
மேற்கு வங்கத்தில் 294 தொகுதிகளில் 8 கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் வரும் 27ஆம் தேதி தொடங்குகிறது. இதில் மூன்றாவது முறையாக ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி போராடி வருகிறது. முதல்வர் மம்தா பானர்ஜி பவானிபூரில் எம்எல்ஏவாக இருக்கிறார். கடந்த இரண்டு முறையும் அந்த தொகுதியில் நின்று வெற்றி பெற்றார்.
இந்த முறை நந்திகிராமம் தொகுதியில் போட்டியிட உள்ளார். 291 தொகுதிகளுக்கும் வேட்பாளர் பட்டியலை இன்று அவர் அறிவித்தார். தைரியமிருந்தால் இந்த தொகுதியில் மம்தா போட்டியிடும் என்று பாஜகவினர் சவால் விட்டிருந்தனர். இந்நிலையில் அந்த சவாலை ஏற்ற மம்தா பானர்ஜி தற்போது நந்திகிராமம் தொகுதியில் தான் போட்டியிட உள்ளதாக அறிவித்து பாஜக விடுத்த சவாலை ஏற்றுக் கொண்டுள்ளார்.