Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

சவாலை வென்ற 5 ஆம் வகுப்பு மாணவி….. ஒருநாள் தலைமையாசிரியராக…. இணையத்தை கலக்கும் விடியோ….!!!!

திருவாரூர் நகர் பகுதியில் அரசு உதவி பெறும் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் சுமதி மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக பல்வேறு போட்டிகளை நடத்தி பரிசுகளை வழங்கி வருகிறார். தலைமை ஆசிரியர் சுமதி ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஒன்று முதல் 20 வரையிலான வாய்ப்பாட்டை ஒப்பிக்கும் மாணவர்களை தன்னுடைய இருக்கையில் அமர வைத்து கிரீடம் அணிவித்து கௌரவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

இந்த சவாலில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவியான சபீதா அசால்டாக வாய்ப்பாட்டை ஒப்பித்துள்ளார். இதனையடுத்து சபிதாவை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து தலைமையாசிரியர் இருக்கையில் அமர வைத்து அவருக்கு கிரீடம் பொருத்தி அழகு பார்த்தனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பாராட்டை பெற்று வருகிறது

Categories

Tech |