தமிழிசை மாணவர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.
வேலப்பன்சாவடியில் உள்ள ஏ.சி.எஸ் மருத்துவமனை அரங்கில் நேற்று டாக்டர் எம்.ஜி.ஆர். கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், நிகர் நிலை பல்கலைக்கழகத்தின் 31-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் பல்கலைக்கழக நிறுவனர் ஏ.சி. சண்முகம், தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன், பல்கலைக்கழகத் தலைவர் ஏ.சி.எஸ். அருண் குமார், செயலாளர் ரவிக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் தமிழிசை சௌந்தர்ராஜன் 2 ஆயிரத்து 241 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கியுள்ளார்.
பின்னர் அவர் பேசியதாவது “கடந்த காலங்களில் நாம் வெளிநாடுகளிடமிருந்து மருந்துகளை இறக்குமதி செய்தோம். ஆனால் தற்போது நாம் உற்பத்தி செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறோம். அந்த அளவிற்கு நமது நாடு வளர்ந்துள்ளது. மேலும் நீங்கள் பட்டம் பெற முக்கிய காரணம் உங்களின் பெற்றோர்கள் தான். எனவே எப்போதும் பெற்றோர்களை மரியாதையுடன் நடத்துங்கள். இந்நிலையில் உங்கள் வாழ்க்கையில் வரும் சவால்களை கடந்து நீங்கள் உழைத்தால் மட்டுமே சாதனையாளராக திகழ முடியும்” என அவர் கூறியுள்ளார்.