சத்தீஸ்கரில் துர்க் கோவர்தன் பூஜையை முன்னிட்டு அந்த சடங்கின் ஒரு பகுதியாக முதலமைச்சர் பூபேஷ் பாகல் சவுக்கால் அடிக்கப்பட்டார்.
சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல் துர் கோவர்தன் பூஜையை முன்னிட்டு ஒரு தனித்துவமான பாரம்பரிய நிகழ்ச்சியில் பங்கேற்றார். அவர் துர்க் சென்று கோவர்தன் பூஜையின்போது கொடியேற்றம் செய்தார். பாகலின் வலது கையில் சாட்டையால் 8 முறை அடிக்கப்பட்டது.
இந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பூபேஷ் பாகல் பதிவிட்டுள்ளார். மேலும் இது அனைவரின் மகிழ்ச்சிக்காக நடத்தப்படுகிறது என்று கூறினார். ராய்ப்பூர் இல்லத்தில் கோவர்தன் பூஜை கொண்டாடிய படங்களும், தனது குடும்பத்தினருடன் சமய சடங்குகளை செய்யும் படங்களையும், பூபேஷ் பாகல் பதிவிட்டு உள்ளார்.