நீதித்துறையை விமர்சித்ததற்காக அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் சிறைக்கு அனுப்பப்பட்டு இருக்கிறார். இது தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியிருப்பதாவது “நீதித்துறை தொடர்பாக விமர்சித்ததற்காக வலையொளியாளர் தம்பி சவுக்கு சங்கர் அவர்களுக்கு நீதிமன்றம் அவமதிப்பு வழக்கில் 6 மாத காலம் சிறைத்தண்டனை அளிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.
அவரின் கருத்துக்களில் பல வற்றில் முரண்பட்டாலும், அவரின் கருத்துரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என்றே கருதுகிறேன். தனி நபர்களின் கருத்தால் நீதித் துறையின் மாண்பு கெட்டுவிடும் என்பது நீதியல்ல” என்று அவர் குறிப்பிட்டுள்ளார். ஒரு குறிப்பிட்ட நீதிபதிக்கு எதிரான கருத்துக்கு, அவரே வழக்குப்பதிவு செய்து அவரே விசாரித்து, எப்படி அவரே தீர்ப்பு வழங்க முடியும் என்று சமூக வலைத்தளங்களில் பலரும் கேள்வி எழுப்புகின்றனர்.