Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

சவுக்கு தோப்பிற்கு அழைத்து சென்ற வாலிபர்…. மாணவிக்கு நடந்த கொடுமை…. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு…!!!

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு 20 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டார்.

கடலூர் மாவட்டத்தில் உள்ள தம்பிபேட்டை காலனியில் ராஜி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விக்னேஷ்(22) என்ற மகன் உள்ளார். கடந்த 2020- ஆம் ஆண்டு கடைக்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்து கொண்டு இருந்தா எட்டாம் வகுப்பு மாணவியை விக்னேஷ் பின் தொடர்ந்து சென்று காதலிக்குமாறு வற்புறுத்தியுள்ளார். மேலும் அருகில் இருந்த சவுக்கு தோப்புக்கு மாணவியை அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த மாணவியின் பெற்றோர் நெய்வேலி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்த போலீசார் விக்னேஷை கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த கடலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றம் விக்னேஷுக்கு 2000 ரூபாய் அபராதமும், 20 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும் விதித்து அதிரடியாக உத்தரவிட்டது. மேலும் பாதிக்கப்பட்ட மாணவிக்கு அரசின் நிதியிலிருந்து 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.

Categories

Tech |