மன் கி பாத் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் மோடி பல்வேறு கருத்துகளை தெரிவித்துள்ளார்.
இந்திய பிரதமர் மோடி இன்று 87-வது மன் கி பாத் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இதில் பிரதமர் மோடி பல்வேறு கருத்துகளை தெரிவித்துள்ளார். அதாவது இந்தியா பொருளாதார முன்னேற்றத்தை நோக்கி வேகமாகப் பயணம் செய்கிறது. இந்த கனவை நனவாக்குவதற்கு இந்தியர்கள் பலரும் சிந்தித்து பாடுபடுகின்றனர். இதைத்தொடர்ந்து இந்திய ஏற்றுமதிகள் 400 பில்லியன் அமெரிக்க டாலர்களை கடந்துள்ளது என்பது பெருமைக்குரிய விஷயமாகும். இந்திய பொருட்கள் தற்போது புதிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இந்தியாவில் விளையும் பல்வேறு பொருட்கள் வெளிநாடுகளில் கவனத்தை ஈர்த்துள்ளது. அதாவது லடாக்கின் புகழ்பெற்ற ஆப்ரிகாட் பழங்கள் துபாயிலும், தமிழ்நாட்டு வாழைப்பழம் சவுதியிலும் கிடைக்கிறது. பெரிய நிறுவனங்கள் மட்டுமே அரசாங்கத்திற்கு பொருட்களை விற்பனை செய்ய முடியும் என்ற நிலைமை மாறியுள்ளது. இ-மார்க்கெட் என்ற இணையதளம் இதை மாற்றியுள்ளது.
இதனையடுத்து பாபா சிவானந்தாவின் வீரியம் மற்றும் உடல்நிலை நாட்டின் விவாதப் பொருளாக மாறியுள்ளது. இவர் யோகாவில் மிகுந்த ஈடுபாடு கொண்டுள்ளார். ஆயுஸ் துறையில் பல ஸ்டார்ட் அப்கள் மற்றும் நிறுவனங்களின் எழுச்சி சமீபத்திய ஆண்டுகளில் ஊக்கமளிக்கும் வெற்றியாக அமைந்துள்ளது. குஜராத்தின் கடற்கரைகளில் நடைபெறும் ஏக்பாரத் மற்றும் ஸ்ரேஷ்டா பாரதத்தின் உணர்வு குறித்த கண்காட்சியை பற்றி எத்தனை பேருக்கு தெரியும். மேலும் டாக்டர் அம்பேத்கருக்கு தொடர்புடைய பஞ்ச தீர்த்தங்களுக்கு சென்றதை நான் பெருமையாக உணர்கிறேன். இந்த இடங்களை அனைத்து மக்களும் சென்று பார்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன். மேலும் பெண் குழந்தைகளின் கல்வியை மேம்படுத்தி, பெண்களின் அதிகாரத்தை மேம்படுத்துவோம். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.