சவுதி அரேபியாவில் முதலாம் உலகப்போரின் நினைவு விழாவில் நிகழ்த்தப்பட்ட குண்டு வெடிப்பில் பலர் காயமடைந்தனர்.
சவுதி அரேபியாவில் ஜித்தா நகரத்தில் நடைபெற்ற முதலாம் உலகப்போர் நினைவு விழாவில் ஐரோப்பிய தூதர்கள் கலந்து கொண்டனர். கல்லறை பகுதியில் இந்த நிகழ்ச்சிகள் திடீரென வெடிகுண்டு தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. இதில் ஐரோப்பிய தூதர் மற்றும் சவுதி அரேபியாவின் பாதுகாப்பு அதிகாரிகள் காயமடைந்தனர். இந்த தாக்குதல் கோழைத்தனமானது என்று பிரான்ஸ் வெளியுறவு அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது.
அதேவேளையில் சவுதி அரேபியாவில் இருக்கும் தங்கள் நாட்டவர்கள் பத்திரமாக இருக்கும் படியும் பிரான்ஸ் அறிவுறுத்தியுள்ளது. இதனிடையே வெடிகுண்டு தாக்குதலில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் அதிகாரிகளை ஜித்தாவின் ஆளுநர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். வெடிகுண்டு தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.