Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

சவுதி அரேபியாவிற்கு சென்ற வாலிபர் திடீர் உயிரிழப்பு… காரணம் என்ன…? கண்ணீர் மல்க கலெக்டரிடம் மனு அளித்த பெண்…!!!!!

சவுதி அரேபியாவிற்கு சென்ற மீன் பிடி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள திருப்பாலைக்குடி காந்தி நகரை சேர்ந்த முனீஸ்வரன் என்பவரது மனைவி ஞான சிந்து நேற்று கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது, எனக்கு முனீஸ்வரன் கனவர் உள்ளார். எங்களுக்கு திருமணம் ஆகி மூன்று வயதில் இசையமுதன் என்ற மகன் இருக்கின்றான். இந்நிலையில் குடும்ப வறுமையின் காரணமாக என்னுடைய கணவர் முனீஸ்வரன் கடந்த வருடம் மீன்பிடித் தொழில் செய்வதற்காக சவுதி அரேபியா நாட்டிற்கு சென்றுள்ளார். அங்கிருந்து தொலைபேசியில் தினமும் எங்களுடன் பேசி வந்தார்.

கடந்த 13-ஆம் தேதி இரவு எனது கனவரின் திடீரென  உயிரிழந்து விட்டதாக செல்போன் மூலமாக தகவல் கிடைத்து. இதனை அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் நாங்கள் திகைத்து வருகின்றோம்.  மேலும் வெளிநாட்டில் இறந்து போன என்னுடைய கணவனின் உடலை முறைப்படி நல்லடக்கம் செய்வதற்கு வசதியாக ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மூன்று வயது மகனுடன் தவித்து வரும் எனக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் அந்த மனுவில் குறிபிட்டுள்ளார். இதனையடுத்து ஞான சிந்துவின் மனுவை பெற்றுக் கொண்ட கலெக்டர் அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்.

Categories

Tech |