சவுதி அரேபியாவில் ஒன்றரை வருடமாக ஊதியம் இல்லாமல் தவிக்கும் கணவரை மீட்டு இந்தியாவுக்கு அழைத்து வரவேண்டும் என ராமநாதபுரம் ஆட்சியரிடம் பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தை அடுத்த மாங்காடு கிராமத்தைச் சேர்ந்த நாகராஜன் கடந்த 2018 ஆம் ஆண்டு சவுதி அரேபியாவுக்கு தோட்ட வேலைக்காக சென்றார். ஆனால் அங்கு அவர் தோட்ட வேலைக்கு பதிலாக பாலைவனத்தில் ஒட்டகம் மேய்க்கும் பணியில் ஈடுபடுத்தபட்டதாக கூறப்படுகிறது.
மேலும் அவருக்கு கடந்த ஒன்றரை வருடமாக சம்பளம் வழங்கப்படவில்லை. எனவே உணவுக்கு திண்டாடி வரும் தனது கணவரை மீட்க கோரி அவரது மனைவி முனீஸ்வரி மாவட்ட ஆட்சியர் திரு. வீரராகவ ராவ்வை நேரில் சந்தித்து புகார் மனு அளித்தார்.