சவுதி எண்ணெய் நிலயத்தின் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சவுதி அரேபியா ஜசன் நகரிலுள்ள எண்ணெய் நிலையத்தின் மீது தாக்குதல் குறிவைத்து நடத்தப்பட்டதாக அரேபியாவின் எரிசக்தி அமைச்சகம் கூறியுள்ளது. இந்த தாக்குதலில் உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை என்றும் ஒரு டேங்கர் மட்டும் தீப்பிடித்துள்ளதாக கூறியுள்ளது. மேலும் இந்த தாக்குதல் குறித்து எரிசக்தி அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் கூறியதில் முக்கிய நிறுவனங்களுக்கு எதிராக இந்த தாக்குதல் நடத்தப்பட்டதற்கு சவூதி அரேபியா கடுமையாக கண்டிப்பதாக கூறியுள்ளார் .
5 ثواني.. لمفعول المقذوف😉
على محطة توزيع المنتجات البترولية#السعودية #جازان_الان #جازان pic.twitter.com/IAbgWx8tVE— المرتضى المتوكل (@almortadha_) March 25, 2021
الله يكثر من المقذوفات 😉#الرياض #جدة #جازان #خميس_مشيط https://t.co/Q7EAtQhcvP pic.twitter.com/VJId3FiSsp
— المرتضى المتوكل (@almortadha_) March 25, 2021
இந்த தாக்குதல் உலகத்திற்கான நிலையான எரிசக்தி விநியோகத்திற்கு குறி வைத்ததாகவும் கூறியுள்ளார்.இது மட்டுமின்றி சவுதி அரேபியாவில் பொது மக்கள் வாழும் பகுதியில் வியாழக்கிழமை இரவு ஹவுதிகள் 8 ட்ரோன்களை ஏவியதில் சவுதி அரேபியாவின் வான் பாதுகாப்பு தடுத்து நிறுத்தியதாக சவுதி தலைமையிலான கூட்டுப்படை அறிக்கையில் கூறியுள்ளது.