சவுதி அரேபிய அரசுக்கு சொந்தமான சர்வதேச விமான நிலையம் மீதும், மன்னர் காலித் விமானதளம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக ஏமனின் ஹவுத்தி ஆயத்து படையின் செய்தியாளர் கூறியள்ளார். இந்த தாக்குதலுக்கு ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் பொறுப்பேற்றுக் கொண்டனர். பின்பு 2014 முதல் ஜனாதிபதி ஆப்த் மன்சூர் ஹாடி தலைமையிலான அரசாங்கப் படைகளுக்கும் ஹவுதி போராளிகளுக்கும் இடையிலான உள்நாட்டுப் போரில் ஏமன் சிக்கியது. தென்மேற்கு பகுதியில் உள்ள சவுதி தலைமையிலான அரசு நாடுகளின் கூட்டுப் படை ஏமன் உள்நாட்டுப் போரில் ஜனாதிபதி ஹாடியை ஆதரித்துள்ளது.
அதன்பின் மார்ச் 2015 முதல் அவரது வேண்டுகோளின் பேரில் அந்நாட்டில் தாக்குதல் நடத்தப்பட்டு வருகின்றது.ஹவுத்திகள் மீது தாக்குதல் நடத்தி பதிலடி கொடுக்கின்றன. இதனைத் தொடர்ந்து சமீபகாலமாக சவுதிகள் மீதான தாக்குதல் பெருமளவில் அதிகரித்துள்ளது. இந்த நிலையில், 3 qasef 2k டிரோன்கள் மூலம் அபா சர்வதேச விமான நிலையம் மற்றும் கமிசு முசைத்தில் உள்ள மன்னர் காளி விமான தளம் ஆகியவற்றில் ராணுவ இலக்குகளை குறிவைத்து விமானப்படை தாக்குதல் நடத்தப்பட்டது.
ஏமன் நாட்டு எல்லையை ஒட்டி அமைந்துள்ள ஆஸிம் மாநிலத்தில் உள்ள அப்ஹா சர்வதேச விமான நிலையம் நேற்று திடீர் தாக்குதலுக்கு உள்ளானது. ஆளில்லா ட்ரான் மூலம் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் பயணிகள் விமானம் ஒன்று தீ பிடித்து எரிந்தது. இது தொடர்பாக ஏமனில் சவுதி இன் அட்டூழியம் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது அதற்கு பதிலடி கொடுக்கும் எண்ணத்தில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக ஹவுதி செய்தி தொடர்பாளர் கூறுகின்றார்.