சவுதி பத்திரிகையாளர் ஜமால் கஷோகி என்பவர் அந்நாட்டு இளவரசர் முஹம்மத் பின் சுல்தானின் உத்தரவினால் கொல்லப்பட்டார் என்று அமெரிக்கா செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது.
கடந்த 2018 அக்டோபரில் இஸ்தான்புல்லில் சவுதி தூதரகத்திற்கு திருமண சான்றிதழ் வாங்குவது தொடர்பாக சென்ற பத்திரிகையாளரான ஜமால் கஷோகி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பந்தமாக இளவரசர் முஹம்மத் பின் சுல்தான் மீது அமெரிக்கா ஜோ பைடன் நிர்வாகம் எந்தவித தயக்கமுமின்றி குற்றம்சாட்டியுள்ளது.
மேலும் பைடன் நிர்வாகம், கசோகி கொலை வழக்கு தொடர்பாக சட்டம் ஒன்று பிறப்பித்து அதில் சவுதியை சேர்ந்த 76 பேருக்கு தடைகள் பிறப்பித்துள்ளது .