அமெரிக்க அதிபர் சவுதி மன்னருடன் இரு நாடுகளுக்ககு இடையேயான உறவு குறித்து தொலைபேசி வாயிலாக கலந்துரையாடியுள்ளார் .
அமெரிக்காவின் 46 ஆவது அதிபராக ஜோபைடன் ஜனவரி மாதம் 20ஆம் தேதி பதவி ஏற்றார். மேலும் பதவியேற்றதிலிருந்து உலக நாடுகளின் தலைவர்கள் ஒவ்வொருவரையும் தொலைபேசி வழியாக தொடர்பு கொண்டு அவர்களுடன் உரையாடல் நடத்தி வருகிறார். இதுவரையில் சீன அதிபர் ஜின்பிங், ரஷ்ய அதிபர் புதின், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஆகியோருடன் உரையாடல் நடத்தி வந்ததுள்ளார்.
இந்நிலையில் தற்போது சவுதி அரேபியாவின் மன்னரான சல்மானுடன் அமெரிக்க அதிபர் ஜோபைடன் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு அவரிடம் இரு நாடுகளுக்கு இடையே உள்ள உறவை வலுப்படுத்த வேண்டும் என்றும் சவுதி அரேபியாவுக்கு ஈரானிய ஆதரவு பயங்கரவாத குழுவினால் ஏற்படும் அச்சுறுத்தல் பற்றியும் உரையாடியுள்ளனர்.