Categories
உலக செய்திகள்

சவூதி அரேபியா திட்டம்: ஸ்மார்ட் சிட்டியாக மாறப்போகும் பாலைவனம்?…. இதோ முழு விபரம்….!!!!!

உலகில் வளர்ச்சி அடைந்த பணக்கார நாடுகளில் ஒன்றான சவூதிஅரேபியாவில் மலை சுற்றுலாவில் புரட்சியை ஏற்படுத்த, சவூதி பட்டத்து இளவரசர் முகமதுபின் சல்மான் ஒரு புது உலகளாவிய கனவுத்திட்டத்தை கடந்த 2017 ஆம் வருடத்தில் அறிவித்தார்.  அந்த வகையில் பரவலாக பாலைவனப் பகுதிகள் அதிகம் காணப்படும் சவுதியில், பாலைவனத்தை சோலைவனமாக மாற்றுவதே இந்த திட்டமாகும். பெல்ஜியத்தின் அளவு பரப்பளவு உடைய ஒரு பாலைவனத்தை என்.இ.ஓ.எம் (அல்லது) நியோம் எனப்படும் உயர் தொழில்நுட்ப நகர-பிராந்தியமாக மாற்றுவது முக்கியமான திட்டம் ஆகும். சவுதிஅரேபியாவின் விஷன் 2030 திட்டத்தின் ஒரு பகுதியான இந்த நியோம் நகரத்திற்கான உத்தேசச் செலவு திட்டம் 500 பில்லியன் டாலர் ஆகும். 26,500 சதுர கி.மீ பரப்பளவை உள்ளடக்கிய நியோம் நகரம், குவைத் (அல்லது) இஸ்ரேல் நாடுகளைவிடப் பெரியது.

அத்துடன் இது சவுதி நீதித்துறையின் கீழ் வராத தன்னாட்சி பெற்ற அமைப்பால் நிர்வகிக்கப்படும் என கூறப்படுகிறது. சவூதி அரேபியாவின் பொருளாதாரத்தை மாற்றி அமைக்கும் நோக்கத்துடன் துவங்கப்பட்ட இந்த திட்டத்தில் இதுவரையிலும் 50 ஆயிரம் கோடி டாலர்கள் தொகை ஒதுக்கப்பட்டு உள்ளது. இந்த பெரிய நகரம் நியூயார்க் நகரத்தைவிட 33 மடங்கு பெரியதாக அமையும் என கூறப்படுகிறது. இது 26,500 சதுர கி.மீ பரப்பளவைக் கொண்டிருக்கும். இந்த பெரியநகரம் அகாபா வளைகுடா மற்றும் சவூதிஅரேபியாவின் செங்கடல் கடற்கரை வரை நீண்டு இருக்கும். இந்நகரம் செயற்கை நுண்ணறிவு மற்றும் சுத்தமான எரிசக்தி ஆதாரங்களைப் பயன்படுத்தி கட்டப்படும். அதுமட்டுமின்றி 2026-க்குள் முடிக்கப்படும். இத்திட்டம் எதிர்கால நலனுக்கான ஒரு வரைபடம் ஆகும். இவற்றில் மனிதகுலம் பூமித்தாயின் நலனில் சமரசம் இன்றி முன்னேறுவதை மையமாக கொண்டு உள்ளது.

பறக்கும் டிரோன் டாக்சிகள், ஜுராசிக் பார்க் கேளிக்கை பூங்கா மற்றும் ஒரு மாபெரும் செயற்கைநிலவு போன்றவை நகரத்திற்கு திட்டமிடப்பட்ட விஷயங்கள் ஆகும். இந்த திட்டத்தில் நகர்ப் புற விண்வெளி நிலையம் மற்றும் இரட்டை ஹெலிக்ஸ் வடிவம், ஒரு பருந்தின் நீட்டிய இறக்கைகள் வடிவம், பூக்கும் மலர் ஆகிய வடிவிலான கட்டிடங்கள் கட்டப்படும். நியோமின் முதல்கட்ட வேலை 2025-க்குள் முடியுமென்று கூறப்படுகிறது. செயற்கைக்கோள் படத்தைப் பார்த்தால் வரிசையாக உள்ள வீடுகள், 2 நீச்சல் குளங்கள் மற்றும் 1 கால்பந்து மைதானம் இருக்கிறது. இப்போது நியோம் திட்டத்தில் சவுதி அரச வம்சத்திற்காகன அரண்மனைகள், கோல்ஃப் மைதானங்கள், ஹெலிபேடுகள் ஆகியவை மட்டுமே கட்டப்பட்டிருப்பதை செயற்கைகோள் படங்கள் காட்டுகிறது.

செங்கடல் கடற்கரைக்கும், மலைகள் நிறைந்த ஜோர்டானிய எல்லைக்கும் இடையிலுள்ள பாழடைந்த நிலப்பரப்பு தான் நியோம் நகரம் உருவாக்க திட்டமிடப்பட்டிருக்கும் பகுதி ஆகும். எனினும் அங்கே பழங்குடி மற்றும் நாடோடி மக்களான பெடோயின் ஹவைதாட்மக்கள் வாழ்கின்றனர். நியோம் மெகா சிட்டியை கட்டுவதற்காக இதுவரையிலும் 2 சிறுநகரங்கள் அழிக்கப்பட்டு இருக்கிறது. 20,000 ஹவைய்தாட் மக்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டு இருக்கின்றனர். நியோமின் விளம்பர வீடியோக்கள் சவுதிஅரேபியாவின் கடுமையான சட்டங்கள் இல்லாத தன்னாட்சி பெற்ற ஒரு அழகான, கவர்ச்சியான மாநகரம் தான் நியோம் என காட்டுகிறது. இத்திட்டம் பணக்காரர்களுக்கு மட்டுமே பயன்படக் கூடிய ஒன்று என்கின்றனர். இந்த திட்டத்தின் மற்றொரு பகுதியானது தி லைன் என்று அழைக்கப்படும் பசுமைஆற்றல் நிரம்பிய பகுதியாகும்.

இது ஒரே நேர் கோட்டில் பரவி இருக்கும் நகரமாகும். இந்நகரமானது 105 மைல்கள் (170 கிமீ) நீளமுள்ள ஒரே நேர் கோட்டிற்கு மேல் நீட்டிக்கப்படும் பெல்ட்டாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் இத்திட்டத்தை உருவாக்க சுமார் 20 ஆயிரம் கோடி டாலர்கள் செலவாகும். இந்த திட்டத்தில் ட்ரோஜனா எனும் கிராமம் (அல்லது) வசிப்பிடம் உருவாக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த கிராமத்தில் 2 மைல் நீளத்திற்கு செயற்கையாக உருவக்கப்படும் நன்னீர்ஏரி இருக்கும் எனவும் தொழில்நுட்பம், பொழுதுபோக்கு மற்றும் விருந்தோம்பல் வசதிகள் போன்றவற்றின் கலவையுடன் இந்த கிராமம் அமையும் என கூறப்படுகிறது. ட்ரோஜனா திட்டம் 2030-க்குள் 7 லட்சம் பார்வையாளர்களையும், அங்கு 7,000 பேர் நிரந்தரமாக வசிக்கும்படி குடியிருப்பாளர்களையும் ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்திட்டம் “வுதி ராஜ்ஜியத்தின் தொலைநோக்கு பார்வை – 2030 திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கிறது என சவுதி பட்டத்து இளவரசர் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |