அண்மையில் உயிரிழந்த நடிகை சஹானா மொட்டை ராஜேந்திரனுடன் இணைந்து லாக்டவுன் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.
மலையாள திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் சஹானா. இவர் சிறு சிறு வேடங்களிலும் மாடலாகவும் வலம் வந்தார். இந்நிலையில் சஹானா 21-வது பிறந்த நாளை மே 12 ஆம் தேதி கொண்டாடியுள்ளார். பிறந்தநாளை கொண்டாடிய இரவே உயிரிழந்ததாக செய்தி வெளியானதையடுத்து அவர் கணவர் சஹானா தற்கொலை செய்து கொண்டதாக கூறினார். மேலும் சஹானா ஜன்னல் கம்பியில் தூக்கில் தொங்கியபடி உடலை பார்த்ததாகவும் கூறினார்.
இதையடுத்து போலீஸார் சஹானாவின் உடலை கைப்பற்றி தற்கொலைக்கான அடையாளங்கள் எதுவும் இல்லாததால் இயற்கைக்கு மாறான மரணம் என வழக்கு பதிவு செய்து இருக்கின்றனர். இதையடுத்து கணவன் மனைவிக்குள் அடிக்கடி சண்டை ஏற்படும் என கூறப்படுவதால் கணவரை போலீசார் கஸ்டடியில் எடுத்து விசாரணை செய்து வருகின்றார்கள். இந்நிலையில் இவர் தமிழில் லாக்டவுன் என்ற திரைப்படத்தில் ஜாலி பாஸ்டியன் இயக்கத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் தமிழ் பிரபலங்களான மொட்டை ராஜேந்திரன், முத்துக்காளை உள்ளிட்டோருடன் எடுத்த புகைப்படங்கள் தற்போது வெளியாகி இருக்கின்றது.