முக அழகை பராமரிப்பதற்கான ஒரு சிறிய டிப்ஸ் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.
இன்றைய காலகட்டத்தில் தங்களது அழகை பராமரித்து கொள்வதற்காக பலர் அதிகமாக செலவு செய்து வருகிறார்கள். அழகை பராமரிப்பதற்காக விலை உயர்ந்த பொருட்களையும் வாங்கி பயன்படுத்தும் பழக்கம் தற்போது பெருகி வருகிறது. ஆனால் இயற்கை முறையிலேயே நமது அழகை சிறப்பாக பராமரிக்க முடியும் என்பதை எடுத்துக் காட்டுவது தான் இந்த செய்தி தொகுப்பு. அதன்படி,
தக்காளியை துண்டாக நறுக்கி முகத்தில் தேய்த்து, 5 முதல் 10 நிமிடம் கழித்து தண்ணீரில் கழுவினால் தோலில் எண்ணெய் தன்மையை தக்க வைப்பதுடன், சுத்தமாக வைக்கவும் உதவும். முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் நீக்கி, தோலை மிருதுவாக்கும். மேலும் தக்காளியுடன் 2 ஸ்பூன் எண்ணெய், மஞ்சள் தூள் ஆகியவற்றை கலந்து முகத்தில் தேய்த்து பத்து நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவலாம்.