கமலாதாஸ் என்பவர் 1934 ஆம் ஆண்டு பிறந்தார். இவர் கேரளத்தின் புனையூர்க்குளத்தை சேர்ந்த பாரம்பரியம் மிகுந்த நாலப்பாட்டு நாயர் குடும்பத்தை சேர்ந்தவர். அவரது தந்தை வி.எம்.நாயர். இவர் மலையாளத்தில் மாத்ருபூமி பத்திரிகையை ஸ்தாபித்தவர். கமலாதாஸ் தாயார் பாலாமணி. இவர் ஒரு கவிஞர் ஆவார். கமலா தாஸ் தனது 15 வயதில் வங்கி ஊழியருடன் திருமணம் நடைபெற்றது. அதன் பிறகு அவருடன் கொல்கத்தா சென்றார். இவரின் கணவர் மாதவ தாஸ் இவரது எழுத்தாற்றலை ஊக்குவித்தார். அதனைத் தொடர்ந்து மாதவி குட்டி என்ற புனைபேரில் இவர் ஆங்கிலம் மற்றும் மலையாளத்தில் ஏராளமான சிறுகதைகள் மற்றும் கவிதைகளை எழுதியவர். இவரது என் கதா சுயசரிதை இன்றும் பலராலும் விரும்பி படிக்கப்படும் ஒரு அற்புத படைப்பு ஆகும்.
இதனையடுத்து 1984 ஆம் ஆண்டு இலக்கியத்தில் நோபல் பரிசுக்காக பரிந்துரை செய்யப்பட்டார். இலக்கியத்திற்கான அதி உயர் விருதுகளை கேரளாவிலும் அகில இந்திய ரீதியிலும் சர்வதேச அளவிலும் பெற்று இருக்கிறார். ஆங்கில கவிதைக்காக சாகசத்திய அகதமி விருதினை 1981 ஆம் ஆண்டு பெற்றார். இதனைத் தொடர்ந்து அவரது கணவரின் மறைவுக்கு பின் சாதிக்அலி என்ற முஸ்லிம் லீக்கை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினரை திருமணம் செய்தார். 1999 ஆம் ஆண்டு அவரது பிற்காலத்தில் கமலா சுரையா என்ற பெயரை ஏற்று இஸ்லாத்தை தழுவினார். அதன் பிறகு 2009 ஆம் ஆண்டில் புனேயில் தனது 75 வது வயதில் அவர் காலமானார். மேலும் இவரின் “என் கதை” என்ற சுயசரிதை இந்திய பெண்களின் சரித்திரத்தில் என்றும் பேசப்படும் நூலாக இருந்து கொண்டாடுகிறது.