Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

“சாகுபடிக்கு பயன்படுத்தும் விதைகளின் தரத்தை அறிந்து கொள்ள பரிசோதனை செய்வது அவசியம்”… விதை பரிசோதனை அலுவலர் தகவல்…!!!

சாகுபடிக்காக சேமித்து வைத்திருக்கும் விதைகளின் தரத்தை அறிந்து கொள்ள பரிசோதனை செய்து கொள்வது நல்லது என்று விதை பரிசோதனை அலுவலர் கூறியுள்ளார்.

தர்மபுரி மாவட்ட விதை பரிசோதனை அலுவலர் அருணா வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியதாவது, பயிர்களைப் பராமரிப்பதற்கு நல்ல முளைப்புத்திறன் கொண்ட விதைகளை பயன்படுத்த வேண்டும். அப்படி பயன்படுத்தினால் விதை செலவு குறையும். புறத்தூய்மை பரிசோதனை செய்யும்போது மற்ற பயிர் விதை மற்றும் களைச்செடி கலப்புகள் இருக்கின்றதா? என்று கண்டுபிடிக்கபடுவதால் விதைகளின் தூய்மை உறுதி செய்ய முடிகிறது. மேலும் விதைகளை சேமித்து வைத்திருக்கும் போது பூச்சி நோய் தாக்குதல் காரணமாக முளைப்புத்திறன் கெடாமல் இருப்பதற்கு விதைகளின் ஈரப்பதத்தை குறிப்பிட்ட அளவுக்கு மேல் வைக்கக்கூடாது.

இதனையடுத்து விதைகளின் முளைப்புத் திறனை பாதுகாப்பதற்கு விதை பரிசோதனை மூலம் ஈரப்பதத்தை தெரிந்து கொள்ளலாம். விதை விற்பனையாளர்கள், விவசாயிகள் விதைப்பதற்காக சேமித்து வைத்த விதைகளின் தரத்தை அறிந்து கொள்வதற்கு தங்களிடம் இருக்கின்ற விதை மாதிரிகளை முகப்பு கடிதத்துடன் தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் செயல்படும் விதை பரிசோதனை நிலையத்திற்கு தபால் மூலம் அனுப்பி பரிசோதனை செய்து பார்க்கலாம். அந்த பரிசோதனை முடிவுகள் 30 நாட்களுக்குள் சம்மந்தப்பட்ட விவசாயிகளின் முகவரிக்கு அனுப்பப்படும் என்று தெரிவித்தார்.

Categories

Tech |