திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடசந்தூர் அருகே தக்காளி பழங்களின் விலை வீழ்ச்சி அடைந்ததால் வேதனையடைந்த விவசாயிகள் அவற்றை சாலையோரம் கொட்டினர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடசந்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கோட்டூர், குட்டம், அழகாபுரி, கல்வார்பட்டி, எரியோடு, புது ரோடு ஆகிய பகுதிகளில் தக்காளியை அதிக அளவில் விவசாயிகள் சாகுபடி செய்திருந்தனர். இந்நிலையில் தற்போது தக்காளி அறுவடை செய்யப்பட்டு வருகிறது. ஆனால் தக்காளியின் விலை வீழ்ச்சி அடைந்ததால் விவசாயிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் தக்காளி விலை கிலோ ரூ. 20 முதல் 30 வரை சில மாதங்களுக்கு முன்பு விற்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது தக்காளி வரத்து அதிகமானதால் மார்க்கெட்டில் 15 கிலோ ரூபாய் 30 முதல் 60 வரை மட்டுமே வியாபாரிகள் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்வதால் ஒரு கிலோ தக்காளி ரூ.2 ஆக வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் வேறு வழியின்றி விவசாயிகள் தக்காளிகளை சாலையோரங்களில் கொட்டி விட்டு சென்றனர்.