செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே.ஆர் பெரியகருப்பன் தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் ஜனநாயக முறைப்படி நடத்தப்படவில்லை என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார். மேலும் ஜனநாயக முறைப்படி தேர்தல் நடக்காவிட்டால் சாகும் வரை உண்ணாவிரதம் இருப்போம் என்றும் அவர் கூறியிருக்கிறார்.
ஆனால் அதற்கு அவசியம் இருக்காது. ஜனநாயக முறைப்படி தான் தேர்தல் நடைபெற்று வருகிறது. அதை தெரிந்து கொண்டுதான் அமைச்சர் சாகும் வரை உண்ணாவிரதம் என்று கூறியிருக்கிறார். சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கும் நிலைமை அவருக்கு வராது. திமுகவுக்கு உள்ளாட்சித் தேர்தல் வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ளது. எதிர்க்கட்சியாக இருந்தபோது உள்ளாட்சி தேர்தலில் 60% திமுக வெற்றி பெற்றது. தற்போது மக்கள் முதல்வர் மீது நம்பிக்கை வைத்துள்ளார்கள். எனவே திமுகவை நிச்சயம் வெற்றி பெற வைப்பார்கள் என்று கூறியுள்ளார்.