Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பதாகக் கூறி… தாலுகா அலுவலக வாசலில் அமர்ந்த முதியவர்கள்…!!!

கீரனூர் தாலுகா அலுவலகம் முன் இரண்டு முதியவர்கள் வீட்டுமனை கேட்டு உண்ணாவிரதம் இருந்தார்கள்.

தஞ்சாவூர் மாவட்டம், மாத்தூர் பகுதியில் 67 குடும்பங்கள் வறுமைக்கோட்டிற்கு கீழ் வசித்து வருகின்றனர். இவர்கள் கடந்த 2008-ஆம் வருடம் வீட்டுமனை கேட்டு அதே பகுதியில் வசித்த முதியவர்களான பாலகிருஷ்ணன், ஸ்டீபன் பெர்னாண்டோ ஆகியோர் தலைமையில் குளத்தூர் தாசில்தாரிடம் மனு கொடுத்துள்ளார்கள். இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால் மனவேதனை அடைந்த பாலகிருஷ்ணன், ஸ்டீபன் பெர்னாண்டோ ஆகியோர் சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பதாக தெரிவித்து கீரனூர் தாலுகா அலுவலக வாசலில் உட்கார்ந்தனர். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் இது குறித்து நடவடிக்கை எடுப்போம் என்று கூறியும் அவர்கள் மாலை வரை தாலுகா அலுவலகத்தில் உட்கார்ந்து இருந்தனர்.

இதனை அடுத்து குளத்தூர் தாசில்தார் பெரியநாயகி, துணை தாசில்தார் மணி ஆகியோர் அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு ஒரு மாதத்திற்குள் மாத்தூர் பகுதிக்கு வீட்டுமனை ஒதுக்கி கொடுப்பதாக உறுதி அளித்தார்கள். இதனையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |