Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

சாக்கடையில் சடலமாக கிடந்த ஆண் குழந்தை…. பிறந்த சில மணி நேரத்துக்குள் நடந்த அவலம் .…..மர்மபெண் யார்? போலீசார் விசாரணை…!!

கழிவு நீர் வாய்க்காலில் பிறந்து சில மணி நேரமே ஆன   ஆண் குழந்தை சாக்குப்பையில் பிணமாக  மீட்கப்பட்ட  சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம், மேல அலங்கம் பகுதியில் கழிவுநீர் வாய்க்கால் அமைந்துள்ளது . அந்த வாய்க்காலில் குப்பைகள் இருக்கும் நிலையில் அந்த குப்பைகளை அகற்றுவதற்காக தூய்மைப் பணியாளர்கள் கடந்த 17ஆம் தேதி  காலை சென்றுள்ளனர். அந்த கழிவு நீர் வாய்க்காலில் சிறு சாக்குப் பை ஒன்று கிடந்துள்ளது. அந்த பையை எடுத்து தூய்மைப் பணியாளர்கள் பார்த்தபோது அதில் துணிகள் சுற்றப்பட்டு பச்சிளம் ஆண் குழந்தை இறந்த நிலையில் இருந்துள்ளது.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பணியாளர்கள் அவ்வழியாக சென்ற மக்களிடம் இதை கூறியுள்ளனர்.  இதையடுத்து  தஞ்சை மேற்கு காவல்  நிலையத்தில் தகவல்அளித்துள்ளனர். இந்த தகவலை அறிந்த காவல் ஆய்வாளர் சந்திரா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தியுள்ளனர் .

மேலும் பிணமாக இருந்த பச்சிளம் ஆண் குழந்தை தொப்புள் கொடியுடன் இருந்ததால் பிறந்து சில மணி நேரத்திற்குள் கால்வாயில் கொண்டுவந்து வீசியுள்ளதாக தெரிகிறது. மேலும் குழந்தையை வீசிவிட்டு சென்றது யார் ?என்று தெரியவில்லை குழந்தை யாருடையது என்பதை கண்டுபிடிப்பதற்காக தஞ்சை ராசாமிராசுதார் அரசு மருத்துவமனைக்கு போலீசார் சென்றுள்ளனர்.

இதனை தொடர்ந்து அங்கு பிரசவத்திற்காக ஏற்கனவே சேர்க்கப்பட்டிருந்த கர்ப்பிணிகளின் விவரங்களை கேட்டு சேகரித்துள்ளார் .மேலும் கடந்த இரண்டு நாட்களில் குழந்தை பெற்றவர்களின் விவரங்களையும் ஆய்வு செய்து அந்தந்த குழந்தைகளுடன் தாய்மார்கள் மருத்துவமனையில் இருக்கிறார்களா ?என்று போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.

இந்நிலையில் மருத்துவமனையில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்துள்ளனர் . ஆனால் அந்த ஆய்வின் போது எந்தவித தகவலும் போலீசாருக்கு கிடைக்கவில்லை . இதனைத்தொடர்ந்து மேல அலங்கம், மேலவீதி பகுதிகள் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் போலீசார் ஆய்வு செய்துள்ளனர் .

அப்போது குழந்தை பிணமாக கிடந்த பகுதியில் மர்ம பெண் ஒருவர் நைட்டி அணிந்துகொண்டு சிறிய சாக்கு பையில் பச்சிளம் ஆண் குழந்தையை கொண்டு வந்து கழிவுநீர் வாய்க்களில் தூக்கி வீசிய காட்சி பதிவாகி இருந்துள்ளது. இந்நிலையில் பதிவான காட்சிகள் மூலம் போலீசார் விசாரணையை தொடங்கினர்.

இதனைதொடர்ந்து பிறந்த குழந்தையை கழிவு நீர் வாய்க்காலில் வீசி சென்ற பெண் யார் என்ற அடையாளம் தெரிய வந்துள்ளது . ஆனால் பச்சிளம் குழந்தையை கொலை செய்து கொண்டு வந்து வீசினரா ? இல்லை பிரசவத்தின் போது குழந்தை இறந்து பிறந்ததால் கால்வாயில் விசியுள்ளாரா? என்ற விவரம் போலீசாருக்கு தெரியவில்லை. இதனால் பச்சிளம் ஆண் குழந்தையை பிரேத பரிசோதனை செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர்.

இதனையடுத்து இறந்த குழந்தையை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்து கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். மேலும் இந்த சம்பவத்தில் வேறு யாருக்காவது தொடர்பு உண்டா என்ற கோணத்திலும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |