Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

சாக்கடையில் மிதந்து வந்த 500 ரூபாய் நோட்டுகள்…. அதிர்ச்சியடைந்த பணியாளர்கள்…. ஈரோட்டில் பரபரப்பு…!!

சாக்கடை கால்வாயில் ரூபாய் நோட்டுகள் மிதந்து வந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஈரோடு மாவட்டத்திலுள்ள மேட்டூர் சாலையில் இருக்கும் சாக்கடை கால்வாய்களை தூய்மைப் பணியாளர்களான சுந்தர்ராஜ், செந்தில் ஆகியோர் சுத்தம் செய்து கொண்டிருந்தனர். அப்போது கழிவுநீரில் 500 ரூபாய் நோட்டுகள் மிதந்து வந்ததை பார்த்து தூய்மைப் பணியாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து பணியாளர்கள் ரூபாய் நோட்டுகளை சேகரித்து அதனை மாநகராட்சி அதிகாரிகளிடம் ஒப்படைத்துவிட்டனர். தமிழகத்தில் வருகிற 19-ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளதால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கிறது.

எனவே உரிய ஆவணம் இல்லாமல் 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் கொண்டு செல்லப்படும் பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்கின்றனர். எனவே வாக்காளர்களுக்கு விநியோகிக்க கொண்டு சென்ற பணத்தை பறக்கும் படையினரின் சோதனைக்கு பயந்து சாக்கடையில் வீசி சென்றார்களா அல்லது வேறு யாருடைய பணமாவது தவறி சாக்கடைக்குள் விழுந்து விட்டதா என்பது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |