Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

சாக்கடையில் மிதந்து வந்த 2000, 200, 100, 50 ரூபாய் நோட்டுகள்…. கைவிட்டு எடுத்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி….!!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் 2000 ரூபாய் நோட்டுக்கள் கழிவு நீர் கால்வாயில் மிதந்து வந்ததை அப்பகுதி மக்கள் வியப்புடன் வேடிக்கையாக பார்த்தனர். தூத்துக்குடி மாவட்டம் சிவன் கோவில் தேரடி வீதி பகுதியில் கழிவு நீர் ஓடை ஒன்று உள்ளது. அந்த கழிவு நீர் ஓடையில் திடீரென்று 2000, 200, 100,50 ரூபாய் நோட்டுகள் ஒவ்வொன்றாக மிதந்து வந்துள்ளன. இதனை அப்பகுதி மக்கள் மிகுந்த ஆச்சரியமாக பார்த்துக் கொண்டிருந்தனர்.

அந்த பணத்தை எப்படி எடுப்பது என்று  சிலர் யோசித்துக் கொண்டிருக்கும் போது ஒருவர் மட்டும் வேகமாக முன்னேறி கையை விட்டு அந்த நோட்டுக்களை மிகுந்த மகிழ்ச்சியுடன் எடுத்துப் பார்த்தார். அவர் முகத்தில் அவ்வளவு பிரகாசமான மகிழ்ச்சியுடன் ஒவ்வொரு நோட்டாக எடுத்துப் பார்த்துக் கொண்டிருந்தார். அதன் பிறகு அந்த ரூபாய் நோட்டுகள் அனைத்தும் சிறு குழந்தைகள் விளையாடும் நோட்டுகள் என தெரிய வந்ததும் அவர் மிகுந்த ஏமாற்றம் அடைந்தார். இதனை அப்பகுதி மக்கள் வேடிக்கையாக பார்த்தனர்.

Categories

Tech |