Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

சாக்கடை கால்வாய்கள் ஆக்கிரமிப்பு… ஆட்சியர் நேரில் ஆய்வு… ஆணையரின் அதிரடி உத்தரவு…

சாக்கடை கால்வாயின் மேல் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற நகராட்சி ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியில் கடந்த வாரம் விடிய விடிய இடி மின்னலுடன் பலத்த மழை பெய்துள்ளது. இதனால் பள்ளிபாளையம் பகுதி முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளித்துள்ளது. இந்நிலையில் முக்கிய சாலைகளில் தண்ணீர் தேங்கிய நிலையில், சில வீடுகளும் இடிந்து விழுந்துள்ளது. இதனையடுத்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயாசிங், கூடுதல் தலைமை செயலாளர் தயானந்த் கட்டாரியா மற்றும் அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்து மழைநீர் வெளியேற உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டுள்ளனர்.

இதனைதொடர்ந்து அப்பகுதி சாக்கடை கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டதாலும், சிலர் அப்பகுதிகளில் ஆக்கிரமிப்பு செய்ததாலும் தான் மழை நீர் வெளியேற முடியாமல் தேங்கி நிற்பதாக பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர். அதன் அடிப்படையில் பள்ளிபாளையம் நகராட்சி ஆணையர் ரவிசந்திரன் ஆய்வு செய்து சாக்கடை கால்வாய்களின் மேல் உள்ள ஆக்கிரமிப்புகளை சமந்தபட்டவர்கள் உடனடியாக அகற்ற வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

மேலும் பள்ளிபாளையம் பகுதியில் மழைநீர் வெளியேறி இயல்புநிலைக்கு திரும்பிய நிலையில் திருச்செங்கோடு சாலை, பாலம் ரோடு, சங்ககிரி சாலை போன்ற இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை நகராட்சி ஊழியர்கள் அகற்றினால் அதற்கான தொகையை சமந்தப்பட்ட நபர்களிடமே வசூலிக்கப்படும் என ஆணையர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |