சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தேனி மாவட்டம் கம்பம் மணிக்கட்டி பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு சந்தேகப்படும் படியாக சாக்கு பையுடன் நின்று கொண்டிருந்த ஒரு பெண்ணை காவல்துறையினர் பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர் கம்பம் பகுதியில் வசிக்கும் அமுதா என்பது தெரியவந்துள்ளது.
இவர் சட்ட விரோதமாக அப்பகுதியில் கஞ்சா விற்பனை செய்துள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அமுதாவை கைது செய்ததோடு அவரிடமிருந்த 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.